குறுந்தொகை விருந்து
மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
[தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.]
தும்பிசேர்கீரன்
மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
[தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.]
தும்பிசேர்கீரன்
(பரத்தையிற் பிரிந்த தலைமகனது தூதாக வந்தார்க்குத்தோழி யுரைத்தது.)
சிறுவர் விளையாடுவதற்காக தச்சன் ஒரு தேர் செய்தான்.சிறிய குதிரை பூட்டியது போன்ற தேர் .ஆனால் அந்தத் தேரில் ஊர்ந்து செல்லும் இன்பம் அவர்களுக்கு இல்லை என்றால் என்ன ? அதைக் கையால் இழுத்துச் செல்லும் இன்பம் அவர்களுக்குப் போதுமே ? தாங்களே தேராகவும் அதை ஓட்டிச்செல்கிறவர்களாவும் அதில் உட்கார்ந்திருப்பவர்களாவும் எத்தனை வகை இன்பம்? இருந்தது . அது போலத்தலைவனைச் சேர்ந்து தழுவி இன்பமடைய வில்லை. எனினும் நல்ல தேர்களும் குளங்களும் உள்ள நட்பை எண்ணி மேன்மேலும் அதைப் பெருகச் செய்து இன்ப மடைந்தோம். அதனால் வளைகள் அவனைப்பிரிந்த வருத்தத்தால் கழலாது இறுகின.
(தலைவன் வந்து செய்யத்தக்கது யாதுமில்லை என்று அவளைத் தேற்றவந்த தோழியிடம் மறுக்கிறாள் என்பது குறிப்பு.)
தும்பிசேர்கீரன்.
http://sangaththamizhvaiyavan.blogspot.in/
http://sangaththamizhvaiyavan.blogspot.in/